பிரதமர் - சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

பிரதமர் - சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கும் இலங்கைக்குமான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததின் ஊடாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்கள் தயாராகியுள்ளமையை கருத்திற்கொண்டு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான துரித ஏற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

கொழும்பு பங்கு சந்தையின் ஏற்பாட்டில் நடக்கும் இன்வஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை போ சீசன்ஸ் ஹோட்டலில் வைத்து சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை - சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டமைக்கு சிங்கப்பூர் அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததின் ஊடாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு சிங்கப்பூர் முதலீட்டாளர் பலரும் தயாராக உள்ளமையினால் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது விசேட அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment