மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு அனர்த்தம் தொடர்பில், கொழும்பு மாநகர ஆணையாளர் வி.கே.ஏ. அநுரவை பதவி நீக்க, மேல்மாகாண ஆளுநர் கே.சீ. லோகேஸ்வரன் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரதாஸ நாணயக்கார தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால், கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு தொடர்பான அனர்த்தம் தொடர்பில் மேற்கொள்ள்பபட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மேல்மாகாண ஆளுநரின் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில், ஜனாதிபதியினால் ஒருவரைக் கொண்ட விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதற்கமைய அவ்வாணைக்குழுவினால், ஆணையாளருக்கு ஒரு சில பரிந்துரைகளின் பேரில் செயல்படுமாறு அறிவுறுத்தியிருந்தது.
கடந்த வருடம் சித்திரை புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், சுமார் 100 வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment