சிரியாவில் இடம் பெற்று வரும் மனித படுகொலைகளை கண்டித்தும் அங்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு நகரில் நேற்று (1.3.2018) வியாழக்கிழமை மாலை தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சிரியாவில் இடம் பெற்று வரும் படுகொலைகளை கண்டித்தததுடன் அங்கு உடனடியாக யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னாள் மட்டக்களய்பிலுள்ள கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிரியாவில் குண்டுகளை போட வேண்டாம், சிரியாவில் யுத்த நிறுத்தம் வேண்டும், மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும்,
இணப்படுகொலைகளை நிறுத்துங்கள், 2009ம் ஆண்டு முள்ளி வாய்க்கால் 2018 சிரியாவா? என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
உலகில் மனிதப் படுகொலைகள் நிறுத்தப்படல் வேண்டும், மனித உயிர்கள் பெறுமதி மிக்கவை யுத்தம் வேண்டாம் எனவும் இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோதெரிவித்தனர்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
No comments:
Post a Comment