கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி ஒன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வருகைதந்துள்ளது.
நேற்று முன்தினம் முதலாம் திகதி கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமை வாய்ந்த பதினெட்டு கார் வகை வாகனங்களும் இரண்டு மோட்டார் சைக்கிளும் பேரணியாக அநுராதபுரம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் நேற்று மாலை யாழ் நகரை வந்தடைந்தன.
இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை ஊடாக நல்லூர் வீதி வழியாக மீண்டும் பேரணி அநுராதபுரம் ஊடாக கொழும்பு சென்றடையும் என கழகத்தின் ஒழுங்காமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை வாகன பேரணி யாழ் கோட்டையை வந்தடைந்த போது வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment