உலக வனஜீவராசிகள் தினம் இன்று - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

உலக வனஜீவராசிகள் தினம் இன்று

உலக வனஜீவராசிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வனஜீவராசி இனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், அவற்றின் சுற்றாடல் பின்னணியை பேணும் நோக்கிலும் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அச்சுறுத்தலுக்குள்ளாகும் வனஜீவராசிகள் தொடர்பான உடன்படிக்கை பிரகடனப்படுத்தப்பட்டு, 40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி பேங்கொக் நகரில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் இந்தத் தினம் முதல் முறையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 68ஆவது அமர்வில் இந்த விடயம் தொடர்பான தினம் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், 2014ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் அருகிவரும் வனவிலங்குகள் மற்றும், தாவரயினங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாக ஒவ்வொருவருடமும் மார்ச் மாதம் 3ஆம் திகதி உலக வனஜீவராசிகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தினத்தை முன்னிட்டு இலங்கையில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சுற்றாடல் செயற்பாட்டாளர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டில் இளம் குரல்களைக் கேளுங்கள் என்னும் கருப்பொருளிலும் , 2016 ஆம் ஆண்டு வனவிலங்குயிர்களின் எதிர்காலம் எங்கள் கைகளில் என்னும் தொனிப்பொருளிலும் இந்த தினம் கொண்டாப்பட்டது.

No comments:

Post a Comment