குளவி கொட்டுக்கு இலக்காகி 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 3, 2018

குளவி கொட்டுக்கு இலக்காகி 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ லோய்னொன் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும் குளவி கொட்டுக்கு இலக்கான 09 பெண் தொழிலார்களும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

தேயிலை மலையில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே இந்த தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது. 

காயங்களுக்கு உள்ளான 09 பெண் தொழிலாளர்கள் குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை எனவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment