இந்தோனேஷியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 அடி நீளமுள்ள ராட்சத முதலையின் வயிற்றில் மனிதனின் கை, கால்கள் இருந்தன. இந்தோனேஷியாவில் உள்ள மருகன்ஹகளில் ஓடும் ஆற்றில் 20 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று இருந்ததால் கரையோரம் செல்லவே பொதுமக்கள் பயந்தனர்.
இதையடுத்து பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலையை கொல்ல முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆற்றில் மிதந்து வந்த முதலையை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பின்னர் அதை வெளியே எடுத்து வந்து வயிற்றை கிழித்து பார்த்தனர். அதில் மனித கை, கால்கள் இருந்தன.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்று கரையோரம் ஆன்டிஏராங்க் என்ற வாலிபர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரை முதலை கடித்து கொன்று கை, கால்களை விழுங்கி இருப்பது தெரிய வந்தது. நீண்ட காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை கொல்லப்பட்டதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
No comments:
Post a Comment