ஜனாதிபதிக்கு எதிராக சுமனரத்ன தேரோ போர்க்கொடி! - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

ஜனாதிபதிக்கு எதிராக சுமனரத்ன தேரோ போர்க்கொடி!

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வருகைக்கு எதிராக நேற்று மாலை சுய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 385 பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மட்டக்களப்பில் உள்ள பௌத்த விகாரை, கிறிஸ்தவ தேவாலயம் , பள்ளிவாசலுக்கும் செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லாமல் அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு மட்டும் செல்வாரானால் அதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் , இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் தெரிவித்து நேற்று மாலை மட்டக்களப்பில் உள்ள மங்களாராம விகாரை வாசல் கோபுரத்தில் ஏறி கருப்பு கொடியினை பறக்கவிட்டு எதிர்ப்பினை தெரிவித்தார்.

No comments:

Post a Comment