20 ஆம் நூற்றாண்டும் வாலிபமும் - News View

About Us

About Us

Breaking

Friday, March 2, 2018

20 ஆம் நூற்றாண்டும் வாலிபமும்

ஆடம்பர மொபைல், பெரிய பைக், கலஸ் கெத்து. முப்பது வயச தான்டினா திருமணம் முடிச்சா எங்கே அவை. இன்று மூலையில் முடங்கி கிடக்கும் முதியவர்கள் ஒரு காலம் எம்மை போன்று ஆட்டம் போட்டவர்கள் தான் ஆனால் இன்று அவர்களுடன் பேசுவதற்கு கூட நாம் தயாராக இல்லை. மரணத்தை எதிர்பார்கிறார் அந்த முதியவர் காரணம் உடலில் வலிமை இல்லை பெண்ணையும் பாவத்தையும் தேடுகிறான் வாலிபன் காரணம் உடல் வலிமை. சுபஹானல்லாஹ்.

இஸ்லாம் அனைவருக்கும் பொதுவான இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுத்தறிவை அடிப்படையாக கொண்ட ஒரு அற்புதமான மார்க்கம் இந்த மார்க்கம் அனுபவசாலிகளான முதியவர்களையும், அறிவான வேகமுள்ள வாலிபர்களையும் கொண்டும் வளரத்தெடுத்தார் கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

ஆனால் இன்று, வெறுமெனே பெண்ணின் பின்னால் அழைவதையே தனது வாழ்நாள் குறிக்கோளாக வைத்து வாழும் வாலிபர்கள் எம்மில் பலர். யாருடைய மொபைலை எடுத்து பார்த்தாலும் ஒரு மஹ்ரமில்லாத பெண், அனைவருக்கும் ஹராத்திலாலான ஒரு காதலி, விடிய விடிய ஆபாசமான பேச்சும் வீணாண பேச்சும் ஹராமான உறவு முறையும் இதுவே இன்று டிரென்ட் என்று அழைக்கப்படும் ஒரு வாழ்வியல் முறையாக மாறிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக .

பெண்களை கற்பை பாதுகாக்க சொல்லும் முன் ஆண்களையே தனது பார்வைகளை தாழ்த்துமாறு இறைவன் சொல்லுகிறான் . சில வாலிபர்களுக்கு பஜ்ருடைய தொழுைகை என்றால் என்ன வென்றே தெரியாது பல வருடங்களுக்கு முன் இல்லாவிட்டால் கடந்த நோன்பில் தொழுதிருப்பார் எப்படி தொழ முடியும் பேசி விட்டு முல்குடன் தூங்குவதே அந்த நேரத்தில் தானே. மிக கவலையான விடயம் பஜ்ர் அதான் ஒலிக்கும் போது தான் காதலியிடம் நான் தூங்க போகிறேன் என்கிறான் அந்த வாலிபன் சுபஹானல்லாஹ்.

வெறுமெனே உலகை அழகென்று நம்பி அதில் மூழ்கி, ஷைத்தானுடைய வலையில் சிக்கி சீரழியும் ஆண் பெண்கள், இசை தெளிவான ஹராம், மது தெளிவான ஹராம், புகைத்தல் தெளிவான ஹராம் ஏன் தெரிந்தும் செய்கிறான்! மரணத்தை பற்றிய பயமின்மை. படிச்சு டொக்டர் ஆகியிருப்பான் ஒரு பத்து சஹாபாக்களின் பெயர் கேட்டா தெரியாது. ஆனா நூற்றுக்கணக்கான பாடல்களும் பல நடிகர்களின் பெயர்களும் நன்றாக தெரியும்.

நான், ரஸூருல்லாஹ்வை நேசிக்கின்றேன் அவர் என் உயிருக்கு மேலானவர் என்று பலர் சொல்லும் வார்த்தை வெருமெனே வார்த்தை இன்றி வேறில்லை! அவனவனுக்கு காபிர்களான நடிகர்கள் தான் மேல், சத்தியமாக! இதுவா இஸ்லாம் இது எப்படி வளர்ந்த மார்க்கம் தெரியுமா ? இதில் வாலிபர்களின் முக்கியத்துவம் தெரியுமா ?

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ் அப் பின் உமைர் (ரழி) அவர்கள் ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஒரு இளைஞர். அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் குர்ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.

ஸூரா கஹஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள அந்த இளைஞர்கள் எங்கே? எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?

மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே. இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும் நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது.

1. வாழ்நாளை எப்படி கழித்தாய்...? 
2. வாலிபத்தை எப்படி அழித்தாய்...? 
3. பொருளை எப்படி சேர்த்தாய்...? எப்படி செலவு செய்தாய்...? 
4. கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்...? 
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஸ்பெயினை தாரிக் பின் ஜியாத் (ரஹ்) அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (21) இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?

அல்லாஹ்வை அஞ்சுங்கள் ஈமானை உறுதி படுத்துங்கள் வெரும் பொண்ணும், பெண்ணும் மதுவும் வாழ்க்கை அல்ல. இது ஒரு வலிமுறையாகும். அல்லாஹ்வை மறுமைநாளில் பார்க்க ஆசைபட்டால் போதுமா தூய்மையாக வேண்டாமா.

உடலும் உளமும் தொழுகையின் பக்கம் விரையுங்கள் வாலிபர்கைளே மரணம் மிக விரைவில் மண்ணறையில் தூங்கும் முன் தனி அறையில் பாவமீட்சி செய்துகொள்.


No comments:

Post a Comment