வரலாற்று முக்கியத்துவமிக்க மலைநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 203 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
ஒட்டுமொத்த இலங்கை தேசத்தினதும் சகல அதிகாரங்களையும் பிரிட்டனின் மூன்றாவது ஜோர்ஜ் மன்னரிடம் ஒப்படைக்கும் வகையில் இந்த உடன்படிக்கை 1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் திகதி கைச்சாத்திடப்பட்டது. இதற்கு இன்றுடன் 203 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இது இலங்கையின் இறைமையை தாரைவார்த்த தினமாக கருதப்படுகிறது. இலங்கையின் கடைசி மன்னரான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் 1816 ஜனவரி 24 ஆம் திகதி மெற்றாசிற்கு நாடு கடத்தப்பட்டார். அதுவரை அவர் பத்து மாதகாலம் கொழும்பு கோட்டையில் ஆங்கிலேயர்களால் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
No comments:
Post a Comment