தெரிவாகும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தை, அறிந்து கொள்வதற்காக தொடர் நிகழ்ச்சிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 3, 2018

தெரிவாகும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தை, அறிந்து கொள்வதற்காக தொடர் நிகழ்ச்சிகள்

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றன. 2016ம் ஜூன் மாதம் 24ம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டம் கடந்த வருடம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை உலகில் ஏனைய நாடுகளிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் தொடர்பான மேலதிக செயலாளர் திருமதி திலக்கா ஜயசுந்தர தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை குறித்த சட்டத்தை, அறிந்து கொள்வதற்காக தொடர் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பணிப்பாளர் A.W.S. கித்சிறி தெரிவித்தார்.

இந்த வருடம் தகவல்களை அறிந்து கொள்வது தொடர்பான பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வருடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டின் ஒழுக்க விதிகள் மற்றும் நல்லாட்சியின் அடிப்படை கோட்பாடுகளை நிலை நிறுத்த வேண்டுமாயின், பொதுமக்களின் பங்களிப்பு அவசியமாகும். தமக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பொதுமக்கள் அது தொடர்பில் தெளிவு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த தெளிவை ஏற்படுத்தும் சவாலை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த மேலதிக செயலாளர் இதற்காக அரசாங்கத்தை போன்று தனியார் துறை ஊடகங்களினதும், சிவில் அமைப்புக்களினதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment