நியூசிலாந்தில் இடம்பெற்று வந்த, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. இன்று (03) அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 8 விக்கட்டுக்களால் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய பதின்ம அணி 38.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணத்தை இந்திய அணி (2000, 2008, 2012, 2018) நான்காவது முறையாக வென்றுள்ளது.
இத்தொடரில் பங்கேற்ற இலங்கை இளையவர் அணி, கடந்த ஜனவரி 28 இல் இடம்பெற்ற தட்டு இறுதிப் போட்டியில் (Plate Final) மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று பிளேட் சம்பியனானமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 13 ஆம் திகதி ஆரம்பமான இத்தொடர், இறுதிப் போட்டி உட்பட 48 போட்டிகளை உள்ளடக்கியதாக அமைந்தது.
No comments:
Post a Comment