ஆளுனரிடம் தனியார் கட்டிடம் இராணுவத்தினரால் கையளிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Monday, January 1, 2018

demo-image

ஆளுனரிடம் தனியார் கட்டிடம் இராணுவத்தினரால் கையளிப்பு

bcf5ed676f4431ce1fb90aa8265ecf69_L
மனிதாபிமான நடவடிக்கையின் பின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் வாடகை அடிப்படையில் பெறப்பட்டிருந்த 'அன்டனி பிள்ளை' தனியார் கட்டிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த இந்தக் கட்டிடம் வியாழக்கிழமை (28) ஆம் திகதி வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பின்பு அதிகாரபூர்வமாக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் 2011 ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமான வாடகையடிப்படையில் பெற்று பராமரித்து வந்த இந்த கட்டிடம் பொது மக்கள் மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பு அலுவலமாக இயங்கி வந்தது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *