கபிலச்சீனியை மாத்திரம் விநியோகிப்பதை கட்டாயமாக்க அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 14, 2025

கபிலச்சீனியை மாத்திரம் விநியோகிப்பதை கட்டாயமாக்க அனுமதி

அரச நிறுவனங்களால் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் பெறுகையின் கீழ் கபிலச்சீனி மாத்திரம் விநியோகிப்பதை கட்டாயமாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 27 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் கீழ் இயங்குகின்ற பலவத்த மற்றும் செவனகல தொழிற்சாலைகள் மூலம் கபிலச்சீனி 56,000 மெற்றிக் தொன் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுவதுடன், கரும்புச் செய்கையின் செழிப்பான அறுவடை காரணமாக இவ்வருடம் கபிலச் சீனி உற்பத்தி மட்டத்தையும் கடந்து சென்றுள்ளது.

அதற்கமைய, உயரிய தரப்பண்பு உள்நாட்டு உற்பத்தியான கபிலச்சீனி எமது நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ந்தும் விரிவாக்கம் செய்வதன் மூலம் உள்நாட்டு கபிலச் சீனி தொழிற்றுறையை நிலைபேறாக அபிவிருத்தி செய்வதற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன், குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற ஊழியர்கள், இத்தொழிற்றுறையில் தங்கி வாழ்கின்ற உள்நாட்டு கரும்பு விவசாயிகளும் இவ் உற்பத்தித் தொழிற்றுறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவை வழங்குநர்களையும் பாதுகாப்பதற்காக கபிலச்சீனி உற்பத்திக்கு உள்நாட்டு சந்தையில் விந்பனை வாய்ப்புக்களை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, முப்படையினர், இலங்கை பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம், அரச மருத்துவமனைகள் போன்ற அரச நிறுவனங்களுக்கு உணவுப் பொருள் பெறுகையின் கீழ் சீனி விநியோகத்தின்போது கபிலச்சீனி மாத்திரம் விநியோகிப்பதற்கு கட்டாயமாக்குவதற்கும், வரையறுக்கப்பட்ட லங்கா சதொச மூலம் நேரடியாக வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியில் கபிலச்சீனி கொள்வனவு செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment