உள்நாட்டு சந்தையில் நிலவுகின்ற கீரிசம்பா அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக GR11/பொன்னி சம்பா என அழைக்கப்படும் அரசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 27 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, நாளை (15) முதல் மாதாந்தம் ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சமாக 520 மெட்ரிக் தொன் வரையிலான GR/11 வகை பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் வீட்டுமட்ட வருமானம் மற்றும் செலவுக் கருத்துக் கணிப்புக்கமைய இலங்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஆண்டுக்கான அரிசி நுகர்வு 2,460,000 மெற்றிக் தொன்களாவதுடன், அவற்றில் ஆண்டுக்கான கீரிசம்பா நுகர்வு 10 சதவீதமாகும். அதாவது, 246,000 மெற்றிக் தொன்களாகும்.
தற்போது உள்நாட்டுச் சந்தையில் கீரிசம்பா அரிசித் தட்டுப்பாடு நிலவுதாலும், கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு கீரிசம்பா விற்பனை தொடர்பாக கவனம் செலுத்தி ஒரு இறக்குமதியாளருக்கு 520 மெற்றிக் தொன்கள் உயர்ந்தபட்சம், 2025.10.15 ஆம் திகதி தொடக்கம் 2025.11.15 ஆம் திகதி வரை கீரிசம்பா அரிசிக்கு பதிலீடாகக் கருதப்படும் GR11/பொன்னி சம்பா அரிசி இறக்குமதிக்காக இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையிலிருந்து விடுவிப்பதற்காக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் விதந்துரைக்கமைய விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment