வயம்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி : அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 14, 2025

வயம்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதி : அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை

இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான விடுதியை அமைப்பதற்கான காணியை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு 27 தீர்மானங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குளியாப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் தமது மருத்துவமனை உள்ளகக் கற்கைகளை குருநாகல் போதனா மருத்துவமனையில் மேற்கொள்கின்றார்கள்.

மூன்று கற்கைக் குழுக்களுக்குரிய மருத்துவபீட மாணவர்களுக்கு வதிவிட வசதிகளை வழங்குவதற்கு குருநாகல் போதனா மருத்துவமனைக்கு அண்மையில் வயம்ப பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி இன்மையால் குறித்த மாணவர்களுக்கு தனிப்பட்ட வகையில் விடுதி வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

அதனால், அம்மாணவர்களுக்கு பகல் மற்றும் இரவு வேனைகளில் குருநாகல் போதனா மருத்துவமனைக்கு இலகுவாகச் செல்லக்கூடிய வகையில் பாதுகாப்பான இடத்தில் விடுதியை அமைக்க வேண்டிய தேவையுள்ளது.

அதற்கமைய, குறித்த விடுதியை நிர்மாணிப்பதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள குருநாகல் பிரதேச செயலகப் பிரிவில் குருநாகல் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 80 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் பிரகாரம் கையளிப்புப் பத்திரத்தின் மூலம் இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்திற்கு கையளிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment