பாடசாலை மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் : சட்டத்தை மீறினால் சட்டநடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

பாடசாலை மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணிவது கட்டாயம் : சட்டத்தை மீறினால் சட்டநடவடிக்கை

பாறுக் ஷிஹான்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது பாதுகாப்புக்கருதி கட்டாயமாக பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி அறிவித்துள்ளார்.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இவ்விடயம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைக்கு செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது பாதுகாப்புக் கருதியும் மற்றும் வீதிப் போக்குவரத்து சட்டங்களை அறிவுறுத்தல் செய்யுமாறும் வேண்டிக் கொள்வதோடு, இச்சட்டதிட்டங்களை மீறும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகளை பாடசாலை ஆரம்பத்திலும் முடிவிலும் ஒரு ஒழுங்குபடுத்தல் செய்து வீதிப் போக்குவரத்து காப்பாளர்களை நியமிக்குமாறும் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்குமாறும் அவர் கேட்டுக்ளார்.

எனினும், வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் ஒரு சிலர் பாடசாலை வருகின்றபோது தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment