முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடன் அறிவிக்கவும் : சபையில் அறிவுறுத்திய அமைச்சர் ஆனந்த விஜேபால - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 7, 2025

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடன் அறிவிக்கவும் : சபையில் அறிவுறுத்திய அமைச்சர் ஆனந்த விஜேபால

லோரன்ஸ் செல்வநாயகம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் கோரிக்கை முன்வைக்கலாம். அது பரிசீலனை செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற அமர்வின்போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு சில சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதிகள் உபயோகப்படுத்திய பாதுகாப்பு வாகனங்களும் மளப் பெறப்பட்டுள்ளன. புதிய சட்டத்தில் பாதுகாப்புக்களை குறைப்பதாக எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமானால், அது தொடர்பில் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் அது பற்றி பரீசிலிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment