விண்ணப்ப காலம் 09ஆம் திகதியுடன் நிறைவு பெறும், நீடிக்கப்படாது : சந்தேகம் இருந்தால் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Friday, October 3, 2025

விண்ணப்ப காலம் 09ஆம் திகதியுடன் நிறைவு பெறும், நீடிக்கப்படாது : சந்தேகம் இருந்தால் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப காலம் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

09ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு பிறகு இணையவழி விண்ணப்ப முறை மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், 0112-784208, 0112-784537, 0112-785922 மேற்படி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0112-784422 எனும் தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment