யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றின் மலசலகூட குழியில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
நவாலி வடக்கில் நீண்டலமாக பராமரிப்பு இன்றி காணப்பட்ட காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்று (02) துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அதன்போது காணிக்குள் இருந்த மலசலகூடத்தின் குழியின் மேல் மூடி உடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, குழிக்குள் பார்த்த வேளை அதனுள் பெருமளவான துப்பாக்கி ரவைகள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் துப்பாக்கி ரவைகளை பார்வையிட்டு சென்றனர்.
துப்பாக்கி ரவைகளை மீட்க மல்லாகம் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யவுள்ளதாகவும், நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment