ஹங்கேரிய எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 9, 2025

ஹங்கேரிய எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், பௌதீகவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய 6 துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு மத்தியிலும் கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் லாஸ்லோவின் கவர்ச்சியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

ருமேனிய எல்லைக்கு அருகில் உள்ள ஒரு நகரத்தில் பிறந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை, சாட்டான்டாங்கோ என்ற தனது முதல் நாவலை 1985இல் வெளியிட்டார். 

அதுமுதல் ஹங்கேரியில் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக இவர் விளங்கி வருகிறார். இந்த ஆண்டு ‘ஹெர்ஷ்ட் 07769’ என்ற நாவலை இவர் வெளியிட்டுள்ளார். 

நாட்டின் சமூக அமைதியின்மையை இந்த நாவல் துல்லியமாக சித்தரித்துள்ளதாக பலராலும் பாராட்டப்பெற்றது. இவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் கூட.

No comments:

Post a Comment