வெனிசுலா எதிர்க்கட்சி தலைவிக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு : தகர்ந்தது ட்ரம்பின் கனவு - News View

About Us

About Us

Breaking

Friday, October 10, 2025

வெனிசுலா எதிர்க்கட்சி தலைவிக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு : தகர்ந்தது ட்ரம்பின் கனவு

வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடியதால் 2025ஆம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சமாதான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து வந்தார். 

இந்தியா, பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை தான் நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வந்த ட்ரம்ப், தனக்கு சமாதான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து வெளிப்படையாக பேசி வந்தார். 

ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் இவை எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடியதால் மரியா கொரினா மச்சோடோவுக்கு சமாதான நோபல் பரிசை நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இதன் மூலம் நோபல் பரிசு பெற வேண்டும் என்ற டிரம்பின் கனவு தகர்ந்துள்ளது.

No comments:

Post a Comment