சாரதி அனுமதிப்பத்திரத்தை RMV செல்லாமல் பெற்றுக் கொள்ள வசதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 30, 2025

சாரதி அனுமதிப்பத்திரத்தை RMV செல்லாமல் பெற்றுக் கொள்ள வசதி

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின்போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று (30) முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புதுப்பித்தல் செயல்பாட்டின்போது தற்போதுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தில் எந்த மாற்றங்களும் தேவையில்லை என்றால், தற்காலிக அனுமதிப்பத்திரத்தை நுகேகொடையில் உள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் நேரடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான விண்ணப்பதாரர்கள் இனி வெரஹெரயில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் போக்குவரத்துத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment