பாடசாலை பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இரு இளைஞர்கள் மரணம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 30, 2025

பாடசாலை பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இரு இளைஞர்கள் மரணம்

ஹொரவபத்தானை - கபுகொல்லாவ புகுலேவ சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸும் - மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து இன்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்தில் ஹொரவபொத்தானை - நெலுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பாதில செஹான் (21) மற்றும் பிரவீன் காவிந்த இலங்கசிங்ஹ (20) ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம் ஹொரவபொத்தானை பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளில் மேற்கொண்டு வருவதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment