பொலிஸ் திணைக்களத்தின் கலாசாரப் பிரிவின், பதில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகே பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (30) முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சதீஷ் கமகே வௌிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினரிடமிருந்து ரூ. 14 மில்லியனை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கலாசாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சதீஷ் கமகே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் ஓகஸ்ட் 14ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment