அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 3, 2025

அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லொறி ஒன்றும், பவுசர் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், லொறியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment