எரிபொருளுக்கு குறைத்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 1, 2025

எரிபொருளுக்கு குறைத்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிப்பு

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பஸ் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி இம்மாதத்திற்கான எரிபொருள் விலைகளின் திருத்தம் தொடர்பில் நேற்று (31) இரவு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பிற்கு அமைய, இன்று (01) முதல் ஒட்டோ டீசலின் விலை லீற்றருக்கு ரூ.6 குறைக்கப்பட்டு ரூ.283 ஆகவும், சூப்பர் டீசல் விலை லீற்றருக்கு ரூ.12 குறைக்கப்பட்டு ரூ.313 ஆகவும் திருத்தப்பட்டிருந்தது.

இதேவேளை பெற்றோல் ஒக்டேன் 92 விலையும் லீற்றருக்கு ரூ.6 இனால் குறைக்கப்பட்டு, ரூ.299 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தககது.

No comments:

Post a Comment