வெளிநாட்டுச் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாதம், காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கட்டுப்படுத்த தவறியமை தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment