பொத்துவிலில் இரு இஸ்ரேலியர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, August 30, 2025

பொத்துவிலில் இரு இஸ்ரேலியர்கள் கைது

பொத்துவில் அறுகம்பை பகுதியில் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலியர்கள் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

26 வயதுடைய இரண்டு இஸ்ரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோட்டல் உரிமையாளரும் அவரது மனைவியும் ஜீப்பில் பயணித்தபோது, அவர்களுக்கு முன்னால் வந்த இரண்டு இஸ்ரேலியர்கள் அவர்களின் வழியைத் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment