எரிபொருள் விலைகளில் திருத்தம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 31, 2025

எரிபொருள் விலைகளில் திருத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 289 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 283 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அதன் விலை 325 ரூபாவாக இருந்தது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 305 ரூபாவிலிருந்து 299 ரூபாவாக அதன் புதிய விலை குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

No comments:

Post a Comment