ஐந்து மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 3, 2025

ஐந்து மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற ராஜித சேனாரத்ன

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமிருந்து சுமார் 5 மணித்தியால வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று (03) காலை அங்கு முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்றையதினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க. எஸ். போதரகம சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று முற்பகல் அங்கு முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையானதபின்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment