பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் மொனராகலை - கும்புக்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கும்புக்கனை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேகநபரிடமிருந்து மூன்று மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு மதுபான போத்தல்களை விற்பனை செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment