வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், குண்டு துளைக்காத சிறப்பு ரயில் மூலம் சீனா வந்தடைந்தார்.
நேற்று முன்தினம் (01) இரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்ட அவர், நேற்று சீனா சென்றடைந்தார்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு எதிராக சீனா வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளவே கிம் ஜாங் உன் வந்துள்ளார்.
அத்தோடு, மேலும் பல உலக தலைவர்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய விருந்தினர்களாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment