மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கு வாய்ப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 28, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்விக்கு வாய்ப்பு

பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களை அனுமதிப்பதற்கான கொள்கை சட்டமூல வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக  இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உயர்கல்வி துணைக்குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இடையே பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. 

தேசிய மட்டத்தில் சாதனைகளைப் பெறும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகக் கல்வியை தொடர்வதற்கான திட்டத்தைத் தயாரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்க பல்கலைக்கழங்கள் அல்லாத வெளிப் பட்டங்களைப் பெறும் பட்டதாரிகளை தொழில் சந்தையில் இணைத்துக் கொள்வது மற்றும் வெளிப் பட்டங்களின் தரம் மற்றும் அவற்றின் தரத்தைப் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில், இதற்கான துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

உயர்கல்வி தொடர்பான தேவையான விஷயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment