மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கோப் குழுவுக்கு அதிகாரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 28, 2025

மோசடிகாரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கோப் குழுவுக்கு அதிகாரம்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர அவர்களினால் 137 வது பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அமைய குறித்த குழு தொடர்பில் தற்பொழுது காணப்படும் 120(4) நிலையியற் கட்டளையைத் திருத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கைகளைப் பரிசீலிக்கும்போது பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குழு தீர்மானிக்குமிடத்து, அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அத்தகைய சம்பவங்களை நேரடியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு அல்லது பொலிஸ்மா அதிபருக்கு குழுவினால் ஆற்றுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை ஆராய்வதற்காக நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டு எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment