பாடசாலைகளில் அபிவிருத்தி சங்கங்கள் அல்லது பிற வழிகள் மூலம் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதை விசாரிக்கவும், தற்போதுள்ள சுற்றறிக்கைகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்தவும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார்.
சவால்கள் எதிர்கொள்ளப்பட்ட போதிலும் பாடசாலைகளை முறையாக முன்னெடுப்பதற்கு, சில பாடசாலை அதிபர்கள் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சில பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குறித்து ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாகவும், சிலர் அத்தகைய நடைமுறைகளை இலஞ்சத்தின் ஒரு வடிவமாகக் கருதக் கூடும் என்றும் திசாநாயக்க எச்சரித்தார்.
இந்நோக்கத்திற்காக ஒரு முறையான சுற்றறிக்கை வெளியிடப்பட்டால், பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment