எரிபொருள் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 30, 2025

எரிபொருள் விலைகள் குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, சில எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

இதன்படி, 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டருக்கு ரூ. 06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ. 335 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 92 ஆக்டேன் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.

அதேபோல், லங்கா ஆட்டோ டீசல் விலை லிட்டருக்கு ரூ. 06 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ. 277 ஆகும். சூப்பர் டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கிறது.

மேலும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 05 குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ. 180 என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment