வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, September 26, 2025

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேருக்கு விளக்கமறியல்

குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்தின் 2ஆம் ஆண்டு மாணவருக்கு பகிடிவதை கொடுத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3ஆம் ஆண்டு மாணவர்கள் நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய 4 மாணவர்களும் இன்று (26) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​குறித்த 4 மாணவர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment