புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பைறூஸ் : செயற்குழு உறுப்பினர்களாக15 பேர் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, September 27, 2025

புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பைறூஸ் : செயற்குழு உறுப்பினர்களாக15 பேர் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய தலைவராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மீடியா போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் தலைமையில் சனிக்கிழமை (27) கொழும்பு-10, டி. ஆர். விஜேவர்த்தன மாவத்தையிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போரத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின்போதே இத்தெரிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்காக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், ரூபவாஹினி தமிழ் செய்தி வாசிப்பாளரும் அறிவிப்பாளருமான இர்ஷாத் ஏ காதர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 84 வாக்குகளைப் பெற்று எம்.பி.எம். பைறூஸ் தலைவராக தெரிவானார்.
இதேவேளை செயற்குழுவுக்கு 15 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களது விபரம் வருமாறு
இர்ஷாத் ஏ. காதர், யூ.எல். மப்றூக், றிப்தி அலி, எம்.எப்.றிபாஸ், ரம்ஷி குத்தூஸ், அஷ்ரப் ஏ. சமத், ஸமீஹா சபீர், சாதீக் ஷிஹான், எம்.ஏ.எம். நிலாம், சிஹார் அனீஸ், ஜெம்சித் அஸீஸ், எஸ்.எம். றிஸ்வான், எஸ்.என்.எம். சுஹைல், ஏ.எச்.எம். பௌசான், ஜாவிட் முனவ்வர்.

இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment