குருணாகல் பன்சியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெல்சிறிபுர பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு பிக்கு உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (24) இரவு மதச் சடங்குகளை நிறைவு செய்துவிட்டு குறித்த மடத்திலிருந்து மலை உச்சியிலுள்ள தியான மண்டபத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவத்தில், 27 - 47 வயதுடைய, ருமேனியா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 பிக்குகளும் இலங்கையைச் சேர்ந்த 4 பிக்குகளும் மரணமடைந்திருந்தனர்.
மேலும் அதில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த 6 பிக்குகளும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 41 வயதான பிக்கு ஒருவர் மரமணமடைந்துள்ளார்.
உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த பிக்குகளின் இறுதிக் கிரியையகள் நேற்றையதினம் (27) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment