நியூயோர்க் நகரில் நடந்த செயல்களுக்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் விசாவை அமெரிக்கா இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே, பல பலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களுடன் கொலம்பிய ஜனாதிபதி இணைந்துள்ளமை படமாக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவிய காட்சிகள் வெள்ளிக்கிழமை (26) நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியே இடம்பெற்ற போராட்டக்காரர்களுடன் கொலம்பிய ஜனாதிபதி இணைந்த காட்சிகள் காணப்பட்டன.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் பொறுப்பற்ற மற்றும் தீக்குளிக்கும் செயல்களை காரணம் காட்டி, அவரது விசாவை இரத்து செய்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நியூயோர்க் நகரில் உத்தரவுகளை மீறி வன்முறையைத் தூண்டுமாறு அமெரிக்க ஆர்ப்பாட்டக்கார்களை வலியுறுத்தினார் என அமெரிக்க வெளியுறவுத்துறை தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தனது விசா இரத்து செய்யப்பட்டது குறித்து கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இனப் படுகொலையை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டு கொண்டதற்காக எனது விசா இரத்து செய்யப்பட்டள்ளது. இது அமெரிக்க அரசாங்கம் சர்வதேச சட்டத்திற்கு இணங்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இனிமேலும் ஐநா சபையின் தலைமையகம் நியூயார்க்கில் இருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
மற்றொரு பதிவில் டொனால்ட் டிரம்பை 'டொனால்ட் டக்' என்று கூறி கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ கிண்டல் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment