எல்ல - வெல்லவாய வீதியில் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, 5 குழந்தைகள் உட்பட 11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து மக்களை மீட்டனர்.
விபத்தில் சிக்கிய பஸ்ஸில் 38 பேர் பயணித்ததாக கணக்கிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் 32 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் இடம்பெற்ற வேளையில் தூக்கியெறியப்பட்டு புதர்களில் சிக்கியுள்ள 6 பேரை தேடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (5) இடம்பெறவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment