பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 20, 2025

பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்தவர் கைது

பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் பெண்கள் கழிவறைக்குச் செல்வதை காணொளி எடுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மத்துகம, நவுத்துடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்பதுடன் இவர் அதே அலுவலகத்தின் பணியாற்றும் ஊழியர் என பாணந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அலுவலக பெண் ஊழியர்கள் கழிப்பறைக்குச் செல்லும்போது சந்தேகநபர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுப்பதைக் கண்ட ஒருவர் இந்த வியடம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகளைத் தொடங்கிய பாணந்துறை பொலிஸார், சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் சிறிது காலமாக பெண்கள் கழிப்பறைக்குச் செல்லும் வீடியோக்களைப் பதிவு செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment