கைது செய்யப்படுவதற்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதியாக வழங்கிய அறிக்கையின் குரல் பதிவை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ளார்.
குறித்த குரல் பதிவில் ரணில், "நான் எப்போதும் நாட்டிற்காகவே உழைத்திருக்கிறேன். நான் தனிப்பட்ட காரணங்களுக்காக உழைத்ததில்லை. இந்த ஆட்சியின் உண்மையான முகம் இப்போது வெளிவருகிறது. எல்லா துறைகளிலும் இடம்பெறும் இந்த அரசியல் பழிவாங்கல்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
தான் கைது செய்யப்படுவதற்கு சற்றுமுன் நாட்டு மக்களுக்கு கூற விரும்பியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை (23) இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் அகிலவிராஜ் காரியவசம் குரல் ஒலிப்பதிவின் மூலம் இதனை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில், அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment