உப்பு விலை குறைந்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 20, 2025

உப்பு விலை குறைந்தது

லங்கா உப்பு நிறுவனம் தனது அயோடின் கலந்த உப்பு பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நிறுவனத்தின் தலைவர் நந்தன திலக்க இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

400 கிராம் அயோடின் கலந்த உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 1 கிலோ கிராம் பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அடுத்த வாரம் முதல் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 100 ரூபாவுக்கும், 1 கிலோ கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை 200 ரூபாவுக்கும், கிரிஸ்டல் உப்பு பக்கற் ஒன்றின் விலை 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 400 கிராம் உப்புத் தூள் பக்கற் ஒன்றின் விலை சதோசா விற்பனை நிலையங்களில் 90 ரூபாவுக்கு கிடைக்கும் என நந்தன திலக்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக விலைக் குறைப்பு செயல்படுத்தப்பட்டதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment