முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஷி தரூரை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, கொழும்பில் உள்ள ஓர் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.
இந்த சந்திப்பில் முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டுள்ளதுடன், அது தொடர்பான பதிவை அவரது எக்ஸ் கணக்கிலும் வெளியிட்டுள்ளார்.
இந்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராகவும் உள்ள சஷி தரூர், அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்திக்கு பதிலாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி அமெரிக்கத் தூதரக குழுவொன்றும் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், சந்திப்பின் நோக்கங்களோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் காலங்களில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நேபாள விஜயம் ஓர் ஹோட்டல் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவெனவும், இந்தியா தொடர்பான பயண விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment