பொதுமக்களுக்கு கடமைகள், பொறுப்புக்களை தெளிவுபடுத்துவோம் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 29, 2025

பொதுமக்களுக்கு கடமைகள், பொறுப்புக்களை தெளிவுபடுத்துவோம் - இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை மத்திய வங்கியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவோம். அது நாட்டின் நிதி நிலைமையின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆண்டுகால நிறைவை முன்னிட்டு '75 ஆண்டுகள்- 75 நோக்குகள்' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற சித்திரக் கண்காட்சி நிகழ்வில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மத்திய வங்கியின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றி பெரும்பாலானோருக்கு போதுமான தெளிவு கிடையாது. அத்துடன் நாட்டின் பிரதான நிறுவனமான மத்திய வங்கி தொடர்பில் நபர்களுக்கிடையிலான புரிதல் வேறுபட்டதாக இருக்க முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் பிரதேச மட்டத்தில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவோம். அது நாட்டின் நிதி நிலைமையின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரத்தின் நிதிச் சேவையை ஸ்திரப்படுத்த முடியும்.

நடுத்தர மக்கள் மத்தியில் இலங்கை மத்திய வங்கி தொடர்பான புரிதல் பல்வேறுபட்டதாக உள்ளது. 75 ஆண்டு கால பின்னணியை கொண்டுள்ள இலங்கை மத்திய வங்கி நாட்டின் நிதி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment