இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி, குழந்தை - News View

About Us

About Us

Breaking

Saturday, August 30, 2025

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த பெக்கோ சமனின் மனைவி, குழந்தை

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5.50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment