இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் இந்தோனேஷியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 5 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் கைது செய்யப்பட்டது.
பாதாள உலக கும்பலை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று இன்றையதினம் இந்தோனேசியாவுக்கு சென்றிருந்தது.
இந்நிலையில், “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் இன்றையதினம் பிற்பகல் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (29) மாலை அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment