வீட்டு உணவுகளை கோரும் ராஜித சேனாரத்ன ! வைத்தியசாலையில் அனுமதிக்க நோய் பாதிப்பில்லை - News View

About Us

About Us

Breaking

Saturday, August 30, 2025

வீட்டு உணவுகளை கோரும் ராஜித சேனாரத்ன ! வைத்தியசாலையில் அனுமதிக்க நோய் பாதிப்பில்லை

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வீட்டு உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் நேற்றையதினம் காலை ஆஜரானதை தொடர்ந்து அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆகஸ்ட் 29 ஆம் திகதி காலை ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment